Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வு பணி சுணக்கம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்

அரசுக்கு எதிரான போராட்டத்தால், பொதுத்தேர்வு பணிக்கு ஒத்துழைக்காத ஆசிரியர்கள் மீது, பொதுத்தேர்வுக்கு பின் நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

     

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் துவங்கி, ஏப்ரலில் முடிகின்றன. தேர்வு மையங்கள் அமைத்தல்; மாணவர் இறுதி பட்டியல் தயாரித்தல்; 'ஹால் டிக்கெட்' வழங்கும் பணிகள் தீவிரமாகியுள்ளன. பொதுத்தேர்வை அமைதியாகவும், வினாத்தாள், 'லீக்' போன்ற பிரச்னைகள் இன்றி நடத்தி முடிப்பதில், தேர்வுத்துறை தீவிரமாக உள்ளது.ஆனால், ஆசிரியர்களின் தீவிர போராட்டத்தால், தேர்வுக்கான முன் தயாரிப்பு பணி; ஆசிரியர்களுடன் தேர்வு விதிமுறை ஆலோசனை கூட்டம் நடத்துவதில், தேர்வுத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 



எனவே, தேர்வுப்பணிகளை ஏற்க மறுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பொதுத்தேர்வு முடிந்த பின், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.



பள்ளிக்கல்வித்துறை முரண்டுதேர்வுத்துறையில் போதிய ஆட்கள் இல்லாததால், பள்ளிக்கல்வி துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் கூடுதல் வேலைப்பளு சுமத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், பள்ளிக்கல்வி பணிகளை காரணம் காட்டி, தேர்வுப் பணிகளை கிடப்பில் போடுவதாக, ஊழியர்கள் மீது தேர்வுத்துறை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 



பள்ளிக்கல்வி பணியாளர்களும் தேர்வுத்துறை பணியால், மற்ற பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக, கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர் சிலர் கூறியதாவது: தேர்வுத்துறை தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த துறைக்கு தனியாக ஊழியர் உள்ளனர். ஆனால், அங்கு போதிய ஆட்கள் இல்லாததால், அவர்களின் பணிகளை பள்ளிக்கல்வி துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சுமத்துவதால், வழக்கமான பள்ளி பணிகள் பாதிக்கப்படுகின்றன. 



தேர்வுத்துறை பணிகளை பள்ளி கல்வி துறையினர் கவனிப்பதால், சில நேரங்களில் முறைகேடுக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவலை பெற, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தை நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்ட போது, அவரிடம் விளக்கம் பெற முடியவில்லை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement