Ad Code

Responsive Advertisement

தேர்வறை கண்காணிப்பாளர் நியமனம்; இந்தாண்டும் குலுக்கல் முறை

பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு, தேர்வறை கண்காணிப் பாளர்களை நியமிப்பதில், நடப்பாண்டிலும் குலுக்கல் முறையே பின்பற்றப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், தேர்வறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

தலைமையாசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்களாகவும், ஆசிரியர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களை,சரியான சாலை வசதியில்லாத தொலைதுார மையங்களில் நியமிப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால்,தேர்வறை கண்காணிப்பாளர் பணிக்கு நியமிக்கப்பட்ட பின்னரும்,ஆசிரியர்கள் அப்பணியிலிருந்து பின் வாங்குகின்றனர். இந்நிலையை தடுக்கும் வகையில்,குலுக்கல் முறையில் தேர்வறை கண்காணிப்பாளர்களை தேர்வு செய்யும் முறை, கடந்தாண்டு பின்பற்றப்பட்டது.



பள்ளி நிர்வாகத்தினரே,ஆசிரியர்களை தேர்வு செய்து,அவர்களின் பெயர்களை சீட்டுகளில் எழுதி,மாவட்ட கல்வித்துறையில் சமர்ப்பிக்கின்றனர். மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் நடக்கும் தலைமையாசிரியர்கள் கூட்டத்தில்,குலுக்கல் முறையில்,ஒவ்வொரு ஆசிரியரும் தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த முறை,பொது தேர்வறையில் நாற்காலி வசதி கிடையாது என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால்,நீண்ட நேரம் நிற்க முடியாத, உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் பெயர்களை, குலுக்கல்பட்டியலில் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement