Monday, February 29, 2016
தேசிய தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருது: தேனாடு ஊராட்சி பள்ளி ஆசிரியர் தேர்வு
தேசிய அளவில் சிறந்த தொழில்நுட்ப ஆசிரியராக, கோத்தகிரி தேனாடு ஊராட்சிபள்ளி ஆசிரியர்தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனம் (ஐ.சி.டி.ஏ.சி.டி.,), தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, எல்காட் நிறுவனம் ஆகியவை சார்பில் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆசிரியர், கல்லூரி பேராசிரியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது.
வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு
வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில்,
ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு
மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 8.33% பங்களிப்பை அரசே அளிக்கும் என்று கூறினார். ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்த இடைக்கால நிதி ஒதுக்கீடு.
TNPSC :டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி
தமிழக அரசில் காலியாக உள்ள Tester பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 430/2016
பணி: Tester
VAO EXAM : Vidiyal Vellore Answer Keys : GENERAL TAMIL , MATHS & VILLAGE ADMINISTRATION.
- TNPSC VAO Exam 2016 | General Tamil & Village Administrative Key Answer | Vidiyal, Vellore [PDF Format]- Click Here & Download - **New**
கோரிக்கை ஏற்கப்பட்டதால்ஆசிரியர் போராட்டம் 'வாபஸ்'
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தமிழக தொடக்க பள்ளிகளில், 2009 ஜூன், 1க்கு பின், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய கோரி, ஆசிரியர்கள் பல முறை மனு அளித்தும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
வி.ஏ.ஓ., தேர்வு தாள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது யார்?
கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ., தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தது. இதில், 'மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த ஆட்சி எது?' என்ற வினா இடம் பெற்றிருந்தது. வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பதவிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நேற்று எழுத்து தேர்வு நடந்தது.
பிளஸ் 2 தேர்வு முறைகேடுகள் நடந்தால் புகார் அளிக்க பெட்டி
பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்தால், அதுகுறித்து புகார் அளிக்க, அனைத்து தேர்வு மையங்களிலும் புகார் பெட்டி வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், பெற்றோர் மற்றும் தனித்தேர்வர்களும் புகார் மனுக்களை போடலாம்.
பள்ளி மாணவர்களுக்கு பங்கு சந்தை தேர்வு
பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, பங்குச்சந்தை பாடம் குறித்து தனியாக தேர்வு நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி களில், முதன் முறையாக, 2010ல், பங்கு சந்தை குறித்த பாடம், 8ம் வகுப்பு, ௯ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. கணித பதிவியல் மற்றும் பொருளாதார பாட ஆசிரியர்கள் பாடம் எடுத்தனர்.
தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்தவர்களை மாணவி காயத்ரி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசிய அறிவியல் தினம் தொடர்பாகவும் , அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமாக பேசினார்.ஆசிரியை செல்வமீனாள் அறிவியல் சோதனைகளை எளிய முறையில் மாணவர்களுக்கு செய்து காண்பித்து செயல் விளக்கம் அளித்தார்.
தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது.
மாணவர்களுக்கு அறிவியல் போட்டி வென்றால் இலவச ரஷ்யா பயணம்
அறிவியல் படைப்பு போட்டியில் வெல்லும் மாணவர்கள், ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட உள்ளனர். ராமேஸ்வரத்தில் இதுகுறித்து கலாம் பேரன் சலீம், ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் இயக்குனர் ஸ்ரீமதிகேசன் கூறியதாவது:
'கேந்திரிய வித்யாலயா'க்களில் தேசிய கொடி ஏற்ற உத்தரவு
'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினமும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா கூடுதல் ஆணையர் யு.என்.காவரே, மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன.
ஐ.ஏ.எஸ்., தேர்வு 'இன்டர்வியூ' இனி அழைப்பு கடிதம் வராது
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, இனிமேல், நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும், மாறாக, தேர்வாணையத்தின் இணைய தளத்தில், 'இ - சம்மனை' டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
Sunday, February 28, 2016
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்த செலவிலான ஏர்செல் நிறுவனத்தின் CUG திட்டம்!!
AIRCEL POST PAID CORPORATE CUG PLAN FOR Govt. STAFFS and TEACHERS:
PLAN NATIONAL SME @ Rs149,
(Service Tax 14% Extra)
- CUG CALLS UNLIMITED FREE
- 400 MIN FREE LOCAL TO TN MOBILE
- 500MB 2G DATA FREE PER MONTH
NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY
NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY...
1-ii
2-i
3-i
4-iii
5-ii
6-iii
7-ii
8-i
9-iii
10-iv
1-ii
2-i
3-i
4-iii
5-ii
6-iii
7-ii
8-i
9-iii
10-iv
பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுதுங்கள் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள்.
பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளை பயம் இன்றி சிறப்பாக எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்வு தொடங்குகிறதுதமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் விரைவில் தொடங்க இருப்பதால், அதை சந்திக்க மாணவ–மாணவிகள் மும்முரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.
பிளஸ் 2 தேர்வில் முறைகேடா? 15 வகை தண்டனை அறிவிப்பு
இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கான தண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:
சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு
மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார். டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், மானவ் ரச்னா பல்கலையில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர் மேனகா, கூறியதாவது:
கே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்
தமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், 43 இடங்களில் உள்ளன.
Saturday, February 27, 2016
16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,'ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர்.மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் 2009ல் அமலானது.
நாளைய வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்
முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 813 வி.ஏ.ஓ., பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு நாளை நடக்கிறது. முறைகேடுகளை தடுக்க இந்த தேர்வுக்கான வினாத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என, கல்வித்துறை தெரிவிக்கிறது. அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்விபடிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.ஆனால், கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பல விதமாக விடுப்பு எடுக்கின்றனர்.
பதவி உயர்வால் காலியான தலைமையாசிரியர் பணியிடங்கள்: தகுதி பட்டியல் பரிசீலிக்கப்படுமா?
கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்களாக (டி.இ.ஒ.,க்கள்) பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் கற்பித்தல் மேம்பாடு, செயல்பாடுகள் கண்காணிப்பு, 14 வகை மாணவர் நலத்திட்டங்கள் வழங்கல் உட்பட பல்வேறு பணிகளில் தலைமையாசிரியர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.
மகிழ்ச்சியுடன் படித்தால் தேர்வு... பூப்பந்து!: இறையன்புவின் தன்னம்பிக்கை 'டிப்ஸ்' (தேர்வு காலங்கள்)
பிளஸ் 2 தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக, இறையன்பு ஐ.ஏ.எஸ்., கூறியதாவது: தேர்வு என்பது அறிவை விரிவாக்கிக் கொள்ள உதவும் பயிற்சியே தவிர... அது ஒன்றும் யுத்தம் அல்ல.மாணவர்கள் தேர்வு நெருங்குகின்ற போது புதிதாக வாசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல், ஏற்கனவே வாசித்தவற்றை திரும்ப படித்து திடப்படுத்தி கொள்வது அவசியம்.
தேர்வறை கண்காணிப்பாளர் நியமனம்; இந்தாண்டும் குலுக்கல் முறை
பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு, தேர்வறை கண்காணிப் பாளர்களை நியமிப்பதில், நடப்பாண்டிலும் குலுக்கல் முறையே பின்பற்றப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், தேர்வறை கண்காணிப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுகான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
தேதி பாடம்
18-04-2016 தமிழ்
20-04-2016 ஆங்கிலம்
21-04-2016 கணிதம்
22-04-2016 அறிவியல்
23-04-2016 சமூக அறிவியல்
ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத்தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம்,அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில்நடைபெறலாம்.
29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள்கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.
100–க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:–சென்னைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுத்து படிக்கஅவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
Friday, February 26, 2016
EMIS -அறிவுரைகள்
- EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்.
- முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.
புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு
புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகாலபிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
ஊதிய பட்டியலை திருத்தி மோசடி அரசு பள்ளி ஊழியர் 'சஸ்பெண்ட்'
ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, 15 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, அரசு பள்ளி இடைநிலை உதவியாளரை, 'சஸ்பெண்ட்' செய்து, தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து, இளநிலை உதவியாளர் கண்ணன் என்பவர், முறைகேடாக ஊதியம் பெற்று வருகிறார் என்று, தி.மலை முதன்மைக் கல்வி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு
பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல்மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்தப் பகுதி என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ்–2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 4–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 1–ந்தேதி முடிவடைய உள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் தனியார் பள்ளிகளில் பகுதி நேரமாகப் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அ.ஞானகௌரி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேர்வு அறையில் செய்ய வேண்டியது (தேர்வு காலங்கள்)
"பொதுத் தேர்வு குறித்து மாணவர் களின் மனதில் உள்ள பயத்தை போக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. கடைசி நேரத்தில்கூட இதுதொடர்பான ஆலோசனையை அவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டும்," என மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.
பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது
'பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Thursday, February 25, 2016
7th Pay Commission Latest News – Empowered Committee may submit its report in April
There is good news in the store for central government employees who are waiting for the implementation of Seventh Pay Commission. Reportedly, review report will be submitted to Finance Ministry at April end. Pay commission Sources say that P K Sinha headed Empowered Committee of Secretaries will submit its report to Finance Minister Arun Jaitley in April end.
ரயில்வே பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்
பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின், 2-வது ஆண்டாக ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்டஅறிவிப்புகளின்முக்கிய அம்சங்கள்:
B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்.
பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.கடந்த கல்வி ஆண்டு வரையில் பிஎட், எம்எட் படிப்புக் காலம் ஓராண்டாகத்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் (என்சிடிஇ) 2014 விதிமுறைகளின்படி 2015-16-ம் கல்வி ஆண்டிலிருந்து பிஎட், எம்எட் படிப்பு காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டன.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறை தேர்வுத்துறை சுற்றறிக்கை.
பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் விவரம்:
மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்
பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.
தேர்வு நேரத்தில் உடம்பை கவனிப்பது எப்படி? (தேர்வு காலங்கள்)
''தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும், தேர்வின் போதும் உடலும், மனதும் தளர்வாக இருக்க வேண்டும். அதற்கு தளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்,'' என்கிறார் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.தேர்வுகாலங்களில் மாணவர்கள் உடல்நலத்தை எப்படி கவனிக்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவர்களுக்குஅமெரிக்காவில் இலவச கல்வி!
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் இலவசமாக, அமெரிக்காவில் படிக்க, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் புதிய திட்டத்தைஅறிவித்து உள்ளது. அமெரிக்காவில், 4,500 பல்கலைகளில், இன்ஜினியரிங், அறிவியல் மற்றும் கலை படிப்புகளில், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
Wednesday, February 24, 2016
முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!
ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா நகரத்தில் ஜெயராம் மற்றும் வேதவல்லி என்னும் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை மைசூர் ராஜாங்கத்தில் மருத்துவராய் பணிபுரிந்து வந்தார்.
ஜெயலலிதா அவர்களின் இரண்டாவது வயதில் அவரது தந்தை இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் தாய் பெங்களூர் நகரத்திற்கு குடிபெயர்ந்து சென்றார்.
புரட்சித் தலைவி "அம்மா" முதல்வர் பிறந்த நாள் சிறப்பு பதிவு.... சில சுவாரசிய குறிப்புகள்....
1.இரவில் எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் தினசரி அதிகாலை 4 மணிக்கு எழுவது ஜெ.வின் வழக்கம் .அவரை எழுப்பவேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளர்கள் பூங்குன்றன், சுரேஷ் ஆகிய உதவியாளர்கள் 3.50க்கு அலாரம் செய்து விடுகின்றனராம்.
அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு
கடந்த 19–ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர்ஜெயலலிதா, பேரவை விதி 110–ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் குடும்ப நல நிதி திட்டத்தின் கீழ் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.30–ல் இருந்து ரூ.60 என்று உயர்த்தப்படுகிறது.
பி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா? அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!
வழக்கம்போல், எதிர்பார்ப்புக யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.
'விடையை அடித்தால் ரிசல்ட் நிறுத்தம்'
'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்' என, அடுத்த எச்சரிக்கையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிமுறைகளை, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்விவரம் வருமாறு:
14 வயது தாண்டாதவர்கள் 1௦ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, ௧௪ வயதுக்கு குறைவானவர்கள் எழுத முடியாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரலில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி
சட்டசபை தேர்தல் பணி இருக்கிறது எனக்கூறி, பொதுத்தேர்வு பணிக்கு, 'டிமிக்கி' கொடுத்த ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர். முதலில், தேர்வு பணியை பார்க்கும்படி உத்தரவிட்டு உள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, 10 நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை தேர்வுத் துறை தீவிரப்படுத்தி உள்ளது.
பொதுத்தேர்வு பணியை பார்க்க உத்தரவு: ஊத்துக்கோட்டையில் வினோதம்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில், பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சட்டசபை தேர்தல் பணியை பார்க்க, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வழங்கப்பட்ட புத்தக பையை, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு பள்ளிகளுக்கு திரும்பினர்.
பெற்றோர்கள் தருவது ஆதரவா... தொந்தரவா! (தேர்வு காலங்கள்):
இன்னும் சில தினங்களில் பிளஸ் 2 தேர்வும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்கிவிடும். தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் மனதில் இயல்பாகவே பதட்டம் ஆரம்பித்து விடும். இந்தநிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருந்தால் போதும்; தொந்தரவு செய்யவேண்டாம் என்கிறார், மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத்தலைவர் டி. குமணன்.
Tuesday, February 23, 2016
G.O.No.58 Dt:22/02/16-Finance dept- GIS - GROUP INSURANCE SCHEME for employees of Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education Institutions including employees working under Nutritious Meal Programme, Panchayat Assistant / part time clerks and other part-time employees like Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing consolidated pay / honorarium - Enhancement of lumpsum payment from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued. 23 February 2016
பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு
அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அறப்போராட்டம்
ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அறப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.
பிளஸ்–2 தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ்–2) எழுத, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் கடந்த 2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 23–ந்தேதி (இன்று) முதல் 25–ந்தேதி வரை www.tndge.com என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை(ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செட் தகுதித்தேர்வில் தேர்வர்கள் வினாத்தாள் எடுத்து வர தடை.
உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், செட் தகுதித்தேர்வில் வினாத்தாள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டதால், தேர்வர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேருவதற்கான மாநில தகுதித் தேர்வான, செட் தேர்வு நேற்று நடந்தது.
Monday, February 22, 2016
‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் இணைப்பிதழான ‘யங் வேர்ல்டு’ சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, பாண்டிச்சேரி உட்பட நாடு முழுவதும் 21 நகரங் களில் இப்போட்டி நடத்தப்படுகிறது.இதில் ‘ஜூனியர்ஸ்’ பிரிவில் 4, 5, 6-ம் வகுப்பு மாணவர்களும், ‘சீனி யர்ஸ்’ பிரிவில் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்.
இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்
காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12 நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தனர்; மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த போராட்டங்களில், 4.5 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்.டி.சி., விடுமுறை சலுகை
மத்திய அரசு ஊழியர்களுக்கான, எல்.டி.சி., எனப்படும் விடுமுறை பயண சலுகை பெறுவதற்கான நெறிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், விடுமுறை கால புகைப்படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளும்படியும், ஊழியர்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இன்ஸ்பயர் விருது கண்டுபிடிப்பில் மாற்றம்
மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க வேண்டும், என்ற அடிப்படையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது (இன்ஸ்பயர்) வழங்கப்படுகிறது.
அண்ணா பல்கலையில் அறிமுகம்:போலி சான்றிதழ் கண்டுபிடிக்க வசதி
போலி சான்றிதழ் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அண்ணா பல்கலையில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் போலி சான்றிதழ் பிரச்னைகள் உருவெடுத்து உள்ளன. அரசு வேலை, மேற்படிப்பு, தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்வது, பாஸ்போர்ட் எடுத்தல், சொத்து பிரச்னைகளை தீர்த்தல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் பெறுதல், நீதிமன்ற வழக்குகள், பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு, கல்விச்சான்று தேவைப்படுகிறது.
தேர்வர்கள் கடும் அதிர்ச்சி:'செட்' தேர்வு வினாத்தாள் எடுத்து வர தடை
உதவிப் பேராசிரியர்களுக்கான, மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வின் இறுதியில், தேர்வர்கள் வினாத்தாள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
'குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது.
Sunday, February 21, 2016
7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு; நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
Empowered Committee of Secretaries processing the recommendations of 7th Pay Commission (7thCPC) in an overall perspective, are likely to double the percentage of pay hike recommended by the pay commission.
மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வலியுறுத்தல்
மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் விவரங்களை பதிவுசெய்ய, வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை பதிவேட்டில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்தனர். மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் பல சலுகைகளை அறிவித்தார். 'இது, வாக்குறுதிகளாகவே உள்ளன; அரசாணைகளாக தரவில்லை' எனக்கூறி, அரசு ஊழியர்கள், 'ஸ்டிரைக்' கை தொடர்ந்தனர்.
பொதுத்தேர்வு பணி சுணக்கம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்
அரசுக்கு எதிரான போராட்டத்தால், பொதுத்தேர்வு பணிக்கு ஒத்துழைக்காத ஆசிரியர்கள் மீது, பொதுத்தேர்வுக்கு பின் நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் 'குரூப் பி', 'குரூப் சி' பணி: மார்ச் 10 கடைசி தேதி
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச் 1௦ க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க உத்தரவு
ஓய்வூதியம் பெறுவோருக்கு உயிர் சான்று அளிக்க, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 2016-17ம் ஆண்டிற்கான உயிர் சான்று, வரும், மார்ச் 1ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை, அலுவலக வேலை நாட்களில், காலை, 10:30 மணிமுதல், மாலை, 4:00 மணி வரை, மாநகராட்சி ஓய்வூதிய பிரிவில் வழங்க வேண்டும்.
புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது செயல்முறைகளில் மாற்றம்
மத்திய அரசு நிதியுதவி வழங்கும், 'புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது'க்கான செயல்முறைகளில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில், ஆண்டுதோறும் புத்தாக்க அறிவியல் ஆய்வு- - இன்ஸ்பயர்) விருது வழங்கப்படுகிறது.
வியாழனை போலவே உள்ள 5 கோள்கள் கண்டுபிடிப்பு!
சூரிய மண்டலத்திற்கு அப்பால் ஐந்து புதிய கோள்களை, வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின், தெற்கு வான் பகுதியை, 'வாஸ்ப் சவுத்' என்ற எட்டு கேமராக்களைக் கொண்ட சாதனம் மூலம், 'கீல்' பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அதன் மூலம்தான் சமீபத்தில் இந்த ஐந்து கோள்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
Saturday, February 20, 2016
மாற்றுத்திறனாளிகளுக்காக சலுகைகளை அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக சில முக்கிய சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று ஆற்றிய உரையில்,மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஓர் அங்கமாக அனைவரும் ஏற்பதற்கும், வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயருகிறது
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர், தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என். குட்டி கூறியதாவது:–மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'ஒழுங்கு நடவடிக்கையும் பாய்கிறது : SR - ல் பதிவு செய்ய உத்தரவு
பிப்., 10 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு, வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளத்தை பிடிக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து, சில ஆசிரியர் சங்கங்களும், சில கல்வி அலுவலக ஊழியர் சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை
ஆசிரியர்களின் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு:
வி.ஏ.ஓ., தேர்வு'ஹால் டிக்கெட்'
டி.என்.பி.எஸ்.சி.,யின் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.பிப்., 28ம் தேதி நடக்கவுள்ள, வி.ஏ.ஓ., தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, www.tnpsc.gov.in மற்றும், www.tnpscexams.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
TNPSC VAO Exam 2016 Hall Ticket Now Published
எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், வரும் 29-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கு, வரும் ஏப்.1-ஆம் தேதியன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.இ. சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்
பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
Friday, February 19, 2016
அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசு முடிவு: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
- குடும்ப நல ஒய்வூதியம் 3 லட்சம்
- கெளரவ விரிவுரையார் சம்பளம் 15000
- சத்துணவு ஊழியர் ஒய்வூதியம் 1500
- 110 விதியில் முதல்வர் அறிவிப்பு
- குடும்ப நல காப்பீட்டுத்தொகை உதவி 150000/- லிருந்து 200000/- உயர்வு.
Flash News:அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் உட்பட 11 அறிவிப்புகள்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பட்டியல்
அரசு ஊழியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களுக்கான குடும்ப நல நிதி உயர்வு, கவுரவ விரைவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா,
அரசு ஊழியர்களுக்கான குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பேரவையில் அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில், அரசின் முகமாகவும், மனமாகவும் செயல்படுகிறவர்கள் அரசு அலுவலர்கள் தான். அரசால் தீட்டப்படும் செயல் திட்டங்களும், வகுக்கப்படும் நலத் திட்டங்களும் உரிய முறையில் மக்களைச் சென்றடையச் செய்பவர்கள் அரசு அலுவலர்கள்.
ஊதிய விகிதங்கள் மாற்றம் மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு:
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய வல்லுநர் குழு:
1.4.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்துள்ள அரசு அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதியப்பங்களிப்புத் தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும், இவற்றிற்கான வட்டித் தொகையும் அரசுக் கணக்கில் தனியே வைக்கப்பட்டுள்ளன.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனடியாக வழங்கப்படும்.
'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், 'வேலைக்குவராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவு
'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறது.
NPR : ஆதார் எண் சேகரிக்ககாலக்கெடு நீட்டிப்பு
'தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில், பொதுமக்களின் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, தமிழகத்தில், ஜன., 18 முதல் பிப்., 5 வரை, வீடு வீடாகச் சென்று, ஆதார் எண் சேகரிக்கும் பணி நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.
விடைத்தாளில் விளையாடினால் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது: மாணவர்களுக்கு எச்சரிக்கை
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு தேர்வு விடைத்தாளில் விளையாடினால் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என, மாணவர்களை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மார்ச் 4 ல் பிளஸ் 2 அரசு தேர்வு, மார்ச் 15 ல் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகின்றன. கடந்த காலங்களில் சில மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகள் அனைத்தையும் விளையாட்டு தனமாக பேனாவால் கோடிட்டு அடித்து விடுகின்றனர்.
தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' தரப்படுகிறது. அறிவியல் செய்முறை தேர்வுகள், பிப்., 22ம் தேதி முதல், மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குரூப் - 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளில், குரூப் - 2 பதவிக்கான, 2012 நவம்பரில் நடந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு, ஆறு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
ரூ.251க்கு மலிவு விலை போன் கிடைக்கும் என...... முன்பதிவு முடங்கினாலும் நிறுவனம் உறுதி
உலகின், மிக மலிவான, 'பிரீடம் 251' என்ற, ஸ்மார்ட் மொபைல் போன் குறித்து, பல்வேறு தரப்பினர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், 'திட்டமிட்டபடி, 251 ரூபாய்க்கு மொபைல் போனை வழங்குவோம்' என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நேற்று, போனுக்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே, வினாடிக்கு, ஆறு லட்சம் பேர் முயற்சித்ததால் இணையதளம் முடங்கியது.
ரூ.1,500-க்கு "வை-ஃபை' மோடம் பிஎஸ்என்எல் அறிமுகம்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.1,500-க்கு "வை-ஃபை மோடம்' பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை தொலைபேசி வட்டம் சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Thursday, February 18, 2016
Emis ல் முதலில் நாம் செய்ய வேண்டிய வேலைகள்...
EMIS news:
EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2வுக்கு மார்ச், 4; மார்ச், 15ல் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. தேர்வு அறையில் ஆசிரியர்களின் கண்காணிப்பு பணிகளில் மாற்றம்கொண்டு வரப்படுகிறது.
Subscribe to:
Posts
(
Atom
)