அரசு இ - சேவை மையங்களில், பல்வேறு வகையான அரசு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, சொத்து வரி, தொழில் வரி, கம்பெனி வரி, மின் கட்டணம் ஆகியவற்றையும், இ - சேவை மையத்தில் செலுத்தலாம்.
ஆதார் அட்டை பெறுதல், பாஸ்போர்ட் சரி பார்த்தலுக்கான நாள் மற்றும் நேரம் பெற்றுக் கொள்ளுதல், ஆகிய சேவைகளும் வழங்கப்படுகின்றன. அரசு இ - சேவை மையம் தொடர்பான தகவல்கள், மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ள, 'TACTV' என்ற பெயரில், மொபைல் போன், 'ஆப்' உருவாக்கப்பட்டு உள்ளது. இது, 'ஆண்டிராய்டில்' இயங்கும், மொபைல் போன்களில் மட்டுமே செயல்படும்.இந்த மொபைல் போன், 'ஆப்பை', பொதுமக்கள், 'கூகுள் ப்ளே ஸ்டோரில்' இருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
இதை பயன்படுத்தி, அரசு இ - சேவை மையங்களின் முகவரி, வரைபடம், அருகில் உள்ள மையத்திற்கு செல்லும் வழி, அங்கு வழங்கப்படும் சேவை தொடர்பான தகவல், விண்ணப்பம் செய்திருந்தால், அதன் தற்போதைய நிலை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம் என, அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை