Ad Code

Responsive Advertisement

அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் மறுப்பு...

மழை பாதிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிடமுடியாது என்றும் சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வை ஒத்திவைக்க முடியது என்றும் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.



மழை வெள்ளத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர் முகமது நஸ்ருல்லா அளித்திருந்த கோரிக்கை மனுவில்சமீபத்தில் கனமழை கொட் டியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்க மாக டிசம்பர் 2 அல்லது3-ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கும்.


இந்த ஆண்டு கனமழை காரணமாக அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பேரிட ரில் இருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. மாணவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். அதனால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யவும், அடுத்த ஆண்டு இறுதித் தேர்வு வரை படிப்பைத் தொடர மாணவர்களை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். 


உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டுத் தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிடமுடியாது என்றும் சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வை ஒத்திவைக்க முடியது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement