Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.


அதே சமயத்தில், ஊர்திப்படி பெற, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் வழங்கிய, தேசிய அடையாள சான்றையே ஏற்க வேண்டும் என, மாநில ஆணையர் கூறியிருந்தார். அதை உறுதி செய்யாமல், அரசாணை உள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. செவித் திறனை இழந்து, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கு, ஊர்திப்படி மறுக்கப்படுகிறது. இந்த பாரபட்சம் கூடாது என வலியுறுத்தியும், சமீபத்திய அரசாணையில், அது இல்லாததது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement