Ad Code

Responsive Advertisement

பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மழை-வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களிலுள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
 

மழை-வெள்ளத்தில், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கபட்டன. ஏற்கெனவே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும், அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், கட்டடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். முழுமையாக ஆய்வும் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
 


விடுமுறை கால சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இந்த மனுவை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
 


இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜனவரி 22-க்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement