Ad Code

Responsive Advertisement

விருப்ப மொழிப்பாட மதிப்பெண்ணையும் சராசரியில் கணக்கிட முடிவு: பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை

மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வுகளில் சிறுபான்மை(விருப்ப)மொழித்தாள் மதிப்பெண்ணையும் சராசரிகணக்கிட பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் வழங்க ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வில் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் முறையே ஆங்கிலம், தமிழ் மொழித்தாள்கள், பகுதி 3ல் இதர பாடங்களும், 4ல் விருப்ப (விருப்ப) சிறுபான்மை மொழிப் பாடமும் உள்ளன.

இதில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, சமஸ்கிருதம், அராபிக், பிரெஞ்ச் உள்ளிட்ட ஏழு மொழிகளை தேர்வு செய்து படிப்பர்.இந்த விருப்ப மொழிப் பாடங்களில் பெறும் மதிப்பெண்கள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும். ஆனால், மொத்த சராசரியை மதிப்பிடும் போது அதை சேர்த்துக் கொள்வது இல்லை.இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதில் நீதிபதிகள், 'மாணவர்களின் உழைப்பை, திறமையை புண்படுத்துவதோ, மறைக்கவோ கூடாது. மொழிப் பாடத்தின் மதிப்பெண் விபரங்களை சராசரி மதிப்பெண்களோடு இணைத்து கணக்கிட வேண்டும். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளனர்.

தீர்ப்பை அடுத்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் விரைவில் சிறுபான்மை மொழிபாட தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை, சராசரியில் சேர்க்கும் ஆணை பிறக்கப்பிக்கப்படலாம் என தெரிகிறது.மூத்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாணவர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு தற்போது விடிவு பிறக்க உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சில தினங்களில் அரசாணை பிறப்பிக்க வாய்ப்புள்ளது, என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement