Ad Code

Responsive Advertisement

அரையாண்டு தேர்விலும் விடுமுறையிலும் மாற்றமில்லை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை

அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்து,விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.நேற்று மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்குடிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9ம் வகுப்புக்கு டிச., 9ம் தேதியும், 6 முதல், 8ம் வகுப்புகளுக்கு, டிச., 14ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும். அனைவருக்கும் டிச., 22ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

4 Comments

  1. flipkart is one of the top eCommerce site in India here Flipkart SBI offerso
    flipkart is one of the top eCommerce site in India here Flipkart Big billion day offers listso

    ReplyDelete
  2. Helpful & Useful Info, Click to check newly released APPSC Govt Jobs

    Thanks for sharing information & know new govt jobs, Apply Online for latest Andhra Govt Jobs

    Good website for APPSC Govt jobs, Thanks to sharing this all. Dates are Getting up enroll in online for APPSC Assistant Professor 2017 -18

    ReplyDelete
  3. JEE Main Application Form 2020 - National Testing Agency (NTA) will be releasing the application form of JEE Main Application Form 2020 April session on February 7. Candidates who wish to appear for the national level entrance examination will have to submit JEE Main 2020 application form by March 7.

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement