Ad Code

Responsive Advertisement

7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

தஞ்சாவூர்: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் வழங்கப்பட்ட 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்க்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வீட்டு வாடகைப்படி உள்ளிட்டவையும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

அதைத்தொடர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரயிலவே துறையை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 56 கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதேபோல, தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் ரயில்வே ஊழியர்கள் சங்கமான எஸ்.ஆர்.எம்.யூ. யூனியன் சார்பில் இன்று கருப்பு தினமும் அனுசரிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement