Ad Code

Responsive Advertisement

பள்ளிகளுக்கு ரூ.125 கோடி சேதம்

தமிழகத்தில், தொடர் மழையால், பள்ளிக்கல்வித் துறைக்கு, 125 கோடி ரூபாய் சேதம் மற்றும் செலவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 6ம் தேதி முதல், 25ம் தேதி வரை கனமழை பெய்ததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் போன்ற மாவட்டங்களின், பள்ளி, கல்லுாரி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலகத்துக்கு, அதிகாரிகள் அறிக்கை அனுப்பியுள்ளனர். மொத்தம், 125 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில், 85 கோடிக்கு நேரடி சேதமும், 40 கோடிக்கு மறைமுக செலவும் ஏற்பட்டுஉள்ளதாக கணக்கிட்டுள்ளனர். அதில் தெரிவித்துள்ளதாவது:ஓட்டை, உடைசல் கட்டடங்கள், மழையில் இடிந்து விழுந்துள்ளன.

பல பள்ளி கட்டடங்களின் சுவரில், விரிசல் ஏற்பட்டுள்ளதால் மூடப்பட்டுள்ளன. பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகளுக்கு இரண்டாவதாக கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் நீரை வெளியேற்றுதல், மின் கருவிகளை பழுது பார்த்தல், மாற்று கட்டடங்கள் ஏற்பாடு என, பலவகை யில் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர் 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement