Ad Code

Responsive Advertisement

பார்வையிழந்த மாணவி சிகிச்சைக்காக தவிப்பு

பார்வை இழந்த, 10ம் வகுப்பு மாணவி, அறுவை சிகிச்சை செய்ய வசதியின்றி தவிக்கிறார்.திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம், நாச்சம்மாள் காலனியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. கணவரை இழந்த இவர், பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, பிரியங்கா, 15, விக்னேஷ், 13, என, இரு குழந்தைகள். பிரியங்கா, இடுவம்பாளையம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பும், விக்னேஷ் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர்.

மூன்று மாதம் முன், பிரியங்காவுக்கு கடுமையான காய்ச்சலும், தொடர்ந்து வலிப்பும் ஏற்பட்டது. சில நாட்களில், இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. இதுவரை ஒரு லட்சம் ரூபாய் செலவழித்து, மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.

'மூளையில் இருந்து கண்களுக்கு செல்லும் நரம்புகளில், ரத்த கட்டிகள் உள்ளதால், அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, பார்வை கிடைக்கும்' என, டாக்டர்கள் கூறியுள்ளனர். பக்கவாதம் ஏற்பட்டு, வலது காலும், வலது கையும் செயல்படாமல், மாணவி படுத்த படுக்கையாக உள்ளார். சில நாட்களாக, கேட்கும் திறனும் குறைந்து வருவதால், மாணவியின் எதிர்காலம் கேள்வியாக உள்ளது.

ஜெயலட்சுமி கூறுகையில், ''பிளட் கேன்சர்' ஆரம்ப நிலை என டாக்டர்கள் கூறுகின்றனர். தொழிலாளியான என்னால், மருத்துவ சிகிச்சை செய்து, மகளை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறேன். சிலர் செய்த உதவியால், ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டேன்,'' என்றார். மாணவி உயிரை காப்பாற்ற, 97508 31542 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement