Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை

தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. 

இதனடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு: அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, வெளிநாடு செல்ல முடியும். இந்த அனுமதியை பெற, தங்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தர வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், 'பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும், தடையில்லா சான்றுக்காக காத்திருக்க வேண்டாம்' என, கூறப்பட்டுள்ளது. 'பாஸ்போர்ட் பெற விரும்புவோர், விண்ணப்ப படிவ நகலை, பணி நியமன அலுவலருக்கு அனுப்பி விட்டு, பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement