Ad Code

Responsive Advertisement

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது அளிக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் விசாரணை நடத்தினர். தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு மீது ஆசிரியர் கலந்தாய்வு, வழிகாட்டி விற்பனை உள்ளிட்டவை குறித்த புகார் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவின் மீதான நடவடிக்கை ஆகியவை குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறை உத்தரவின் பேரில் இந்த புகார்கள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசுவிடம் பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப் பணித் திட்ட இணை இயக்குநர் பொன்னையா விசாரணை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தார்.
 புகார் மனு அளித்தவர்களை தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வரவழைத்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குநர் நாகராஜமுருகன் விசாரணை நடத்தினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement