Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.

         7–வது சம்பள கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர், டெல்லியில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், ‘‘7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும்’’ என கூறினார்.
இந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement