Ad Code

Responsive Advertisement

அப்துல் கலாம் அடக்கம் செய்யபட்ட இடத்தில் கூட்டம் கூடமாக அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

12.15 மணிக்கு அப்துல் கலாமின் உடல் நல்லடக்கப் பணிகள் முடிந்தன. இதை யடுத்து உடல் அடக்கம் செய் யப்பட்ட இடத்தில் நிறைய மலர்கள் தூவினார்கள். அப் போது இஸ்லாமிய முறைப் படி அப்துல்கலாமின் உறவி னர்கள் பிரார்த்தனை செய் தனர்.

12.20 மணிக்கு அப்துல் கலாம் உறவினர்கள் அங்கி ருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது இருக் கையில் இருந்து எழுந்து சென்று அப்துல்கலாமின் மூத்த சகோதரரிடம் பேசி விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மற்ற கட்சிகளின் தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.


அதன் பிறகு அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல் அடக்கம் நடைபெற்ற இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு இருந்தது. அவர்களை கட்டுப்படுத்த போலீசாரும் அதிரடிப்படையினரும் மிகவும் சிரமப்பட்டனர். 

பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய போது மக்கள் முண்டியடித்தால் தடுப்பு வேலிகள் உடைந்தன. அதை தாண்டி உள்ளே நுழைய முயன்றவர்களை போலீசார் விரட்டினர். உடல் அடக்கம் முடிந்து தலைவர்கள் கிளம்பியதும் அனைத்து பக்கங்களில் இருந்தும் கூட்டத்தினர் முண்டியடித்து உள்ளே சென்றனர். கட்டுப்படுத்த முடியாததால் போலீசாரும் விட்டு விட்டனர். 

கலாம் உடலை பார்க்க முடியாமல் இருந்தவர்கள் உடல் அடக்கம் நடந்த இடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பலர் தொட்டு வணங்கி சென்றார்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement