Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்: விடைத்தாளை மீண்டும் திருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவரது விடைத்தாளை மீண்டும் திருத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த டி.வெள்ளிசுப்பையன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.

மனுவில், முதுகலை வரலாறு பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2013 இல் எழுதினேன். விடைத்தாளில் (ஓஎம்ஆர் சீட்) வினாக்களின் வரிசை எண்ணைக் குறிப்பிட மறந்து விட்டேன். இந்நிலையில், அந்த தேர்வில் எனக்கு பூஜ்யம் மதிப்பெண் அளிக்கப்பட்டு இருந்தது. இதை சரி செய்து விடைத்தாளை திருத்துமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையை அணுகினேன். அவர்கள் மறுத்துவிட்டனர்.எனவே எனது விடைதாளை திருத்தி பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவுக்கு ஆசிரிரியர் தேர்வு வாரியம் சார்பில் அளித்த பதில் மனுவில், மனுதாரர் வினாக்களின் வரிசை எண்ணை ஓஎம்ஆர் படிவத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம். ஏனென்றால் கணினி மூலம் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.அதில் வினா வரிசை எண் இருந்தால் தான் கணினி அதை மதிப்பீடு செய்யும். எனவே மனுதாரரின் தவறு காரணமாக அவரது விடைகள் திருத்தப்படவில்லை. மேலும் தேர்வு முடிந்து ஆசிரியர்கள் பணியிóல் அமர்த்தப்பட்டுவிட்டனர். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது எனக் குறிப்பிட்டிருந்தது.

இதுதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 

தவறு செய்வது மனித இயல்பு. மனுதாரர் வரிசை வினா எண்ணைக் குறிப்பிடாதது சரி செய்யக்கூடிய தவறு தான். இதற்காக விடைத்தாளை திருத்தமுடியாது என்று கூறுவதை ஏற்க இயலாது. ஒருவேளை மனுதாரர் தேர்வில் வெற்றி பெறக்கூடியவராக இருந்தால் கற்பித்தல் தொழிலில் தகுதியான ஆசிரியரை இழந்துவிடுவோம். எனவே அவரது விடைத்தாளை தேர்வு வாரியம் மீண்டும் திருத்த ஏறபாடு செய்ய வேண்டும். அவர் பெறக்கூடிய மதிப்பெண் அடிப்படையில் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து அடுத்த முறை அவரை பணியமர்த்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement