Ad Code

Responsive Advertisement

நினைவுத் திறனை அதிகரிக்கிறதா ஆழ்ந்த இரவு தூக்கம்?

இரவு தூக்கத்தை ஏன் தவிர்க்க கூடாது? என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களுடன் புதிய காரணம் ஒன்றும் சேர்ந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றின் படி ஆழ்ந்த இரவு தூக்கம் மனிதர்களின் நினைவுத் திறனை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எக்சிடர் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆழந்த தூக்கமானது நமது மூளையில் சேமிக்கப்பட்டுள்ள நினைவுகளை அழிந்துவிடாமல் பாதுகாப்பதுடன், சம்பவங்களை விரைவாக நினைவுக்கு கொண்டுவரவும் உதவுவதாக தெரியவந்துள்ளது.  

           மேலும் நினைவுக்கு கொண்டுவர முடியாத பல விஷயங்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு பிறகு நினைவுக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பதாகவும். தூக்கத்திற்கு பிறகு பழைய சம்பவங்களை மீட்டு நினைவுக்கு கொண்டுவரும் சக்தி அதிகரிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement