Ad Code

Responsive Advertisement

இன்று குரூப்- 2 தேர்வு:6 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதில் 6 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் குரூப் 2 தொகுதியில் வணிக வரித் துறை இணை அதிகாரி (8 காலியிடங்கள்), சார் பதிவாளர் (23 காலியிடங்கள்), தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆய்வாளர், உதவிப் பிரிவு அலுவலர் என மொத்தம் 1,241 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கை கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வானது தமிழகத்தில் 114 இடங்களிலுள்ள உள்ள 2,094 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

குரூப் 2 முதல் நிலைத் தேர்வு எழுதுவதைக் கண்காணிக்கும் பணியில் 50 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தங்களது மாவட்டங்களுக்கு உள்பட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று தேர்வை ஆய்வு செய்வர்.

இந்தத் தேர்வை 6 லட்சத்து 20 ஆயிரத்து 220 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுபவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டம் படித்தவர்கள்.

தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரதானத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலும் தேர்ச்சி பெறுபவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement