Ad Code

Responsive Advertisement

பார்வையற்ற முதல் IAS வெளியுறவு துறை அதிகாரி விரைவில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னையைச் சேர்ந்த, பார்வையற்ற பெண் பெனோ ஜெபின், விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, வாழ்த்து பெற உள்ளார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 'டுவிட்டர்' இணையதளத்தில், பெனோஜெபின் குறித்து கூறும்போது, 'கனவுகளுக்கு தடை எதுவும் இல்லை' என, குறிப்பிட்டுள்ளார். இன்று அகில உலகத்தையும், தன் பக்கம் ஈர்த்துள்ள, பெனோ ஜெபின், சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை அந்தோணி சார்லஸ். ரயில்வே ஊழியராக உள்ளார். தாய் பத்மஜா. இவர்கள் மகளின் வளர்ச்சிக்கு, பெரிதும் உதவியாக இருந்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை படைத்த, பெனோ ஜெபின், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தார்.அதன்பின், ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரியில், 2011ல், பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தார். லயோலா கல்லுாரியில், 2013ல் எம்.ஏ., முடித்தார்.

கல்லுாரி படிப்பை முடித்த பின், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்தபடி, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரானார்.பாடங்களை, 'பிரெய்லி' முறையில் படித்து, தேர்வு எழுதினார். முதல் முயற்சியில், தோல்வியை தழுவினார். இரண்டாவது முயற்சியில், தேசிய அளவில், 343வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது, வெளியுறவுத் துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement