Ad Code

Responsive Advertisement

"மாணவர்களுக்குத் தரமான கல்வி அளிப்பவரே சிறந்த ஆசிரியர்'

எருமியாம்பட்டி இ.ஆர்.கே. மகளிர் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளின் 4-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பட்டங்களை வழங்கி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளர் பேராசிரியர் ஏ.ஆர்.வீரமணி பேசியது:

தேசிய அளவில் பல்கலை, கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்த போதும், கல்வியின் தரம் குறைந்து வருகிறது. மாணவர்களுக்குத் தரமான கல்வியைக் கற்பிப்பவரே சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் என்றார்.
தொடர்ந்து, மொத்தம் 490 மாணவியருக்கு பட்டங்களையும், இளநிலை வேதியியல் பாடத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஏ.நந்தினிக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகையையும் வழங்கினார்.
விழாவில், கல்லூரி முதல்வர் பெ.மாது, துணை முதல்வர் த.சக்தி, நிர்வாக அலுவலர் சி.அருள்குமார், கொங்கு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.தீர்த்தகிரி, பொம்மிடி அன்னை இந்தியா கல்வி நிறுவனத் தலைவர் டி.வசந்தகுமார், கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement