Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளியில் படித்த மாணவிக்கு எம்பிபிஎஸ். சீட்

பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த, கிராமப்புற மாணவிக்கு மருத்துவப் படிப்பிற்கான (எம்பிபிஎஸ்) இடம் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். கூலித் தொழிலாளி. இவரது மகள் கனிமொழி (17). பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து கடந்த ஆண்டு (2014-15) பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினார். இவர், 1142 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதலிடத்தை பிடித்தார். 

மாணவி கனிமொழி மருத்துவ படிப்பிற்கு (எம்பிபிஎஸ்.) விண்ணப்பித்திருந்தார். அவருக்கு தரவரிசை பட்டியலில் 147வது இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில், இலவசமாக எம்.பி.பி.எஸ். படிக்க இவர் தயாராக உள்ளார். கிராமப்புறத்தில் உள்ள ஏழை குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, மருத்துவப் படிப்பு படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி கனிமொழியை, மாவட்ட கல்வி அலுவலர் நூர்முகமது, தலைமை ஆசிரியர் குமரேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி துவங்கி 142 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த பள்ளியில் படித்த மாணவி கனிமொழி முதல்முறையாக மருத்துவப் படிப்பு படிக்க தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement