Ad Code

Responsive Advertisement

'வாட்ஸ் ஆப்' மூலம் அவதூறு பரப்பினால் தண்டனை? 'பேஸ்புக்' நிறுவனத்தை நாடியது தமிழக சைபர் கிரைம்

அவதுாறு மற்றும் பீதியைப் பரப்பும், 'வாட்ஸ் ஆப்' பதிவுகளை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இணையதளங்களை விட, வாட்ஸ் ஆப் பதிவுகள், காட்டுத் தீ போல, சில நிமிடங்களில் நாடு முழுவதும் பரவுகின்றன. இதில், பல சமூக அக்கறை கருத்துகள் இருந்தாலும், தீய நோக்கத்தோடு செய்யப்படும் பதிவுகள், அதிகரித்து வருகின்றன.சில நாட்களுக்கு முன், சில தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டு, 'இவை தீவிரவாதிகளின் எண்கள்; இதைத் தொடர்பு கொண்டால், குண்டு வைப்பது உள்ளிட்ட வேலைகள் நடக்கும். எனவே, இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்' என, பொதுமக்களை எச்சரிப்பதாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் பெயரில், வாட்ஸ் ஆப் பதிவு வெளியானது.ஆனால், இந்த பதிவுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்தது. உள்நோக்கத்தோடு, ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது அவதுாறு பரப்பும் வகையில், இப்பதிவு உள்ளது என, புகார் எழுந்துள்ளது. எனவே, வாட்ஸ் ஆப் பதிவுகளை, தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து, சைபர் கிரைம் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாட்ஸ் ஆப் பதிவுகள், ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து, மற்றொரு எண்ணிற்கு செல்லும் போது, தொலைபேசி எண்ணிற்கு உரியவர்களை, பொறுப்பாக்க முடியும். இதுபோன்ற புகார்கள் மீது, நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.இரு தொலைபேசி எண்களுக்கு இடையே நடக்கும் வாட்ஸ் ஆப் உரையாடல், தொலைபேசி உரையாடல் போலத் தான் கருதப்படும். ஆனால், 'குரூப்' மூலம் பரப்பப்படும் பதிவுகள், எங்கிருந்து துவங்கியது என்பதை கண்டுபிடிப்பது, சற்று கடினமாக உள்ளது.குரூப் பதிவின் மூலத்தை, வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்தே பெற முடியும். வாட்ஸ் ஆப் சேவை, 'பேஸ்புக்' நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இதன் அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது.எனவே, வாட்ஸ் ஆப் பதிவின் மூலத்தைப் பெற, பேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி உள்ளோம். அது கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு, குரூப் பதிவு குறித்து, வரும் புகார்களை பதிவு செய்து, விசாரணை மட்டும் நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


வெளிநாடுகளில் எப்படி?



அவதுாறு பரப்பும் வாட்ஸ் ஆப் பதிவுகளை செய்வோருக்கு, சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க, அரபு நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. சில நாடுகள், வாட்ஸ் ஆப் பயன்படுத்த தடை விதித்துள்ளன.இணையதளங்களில், அவதுாறு மற்றும் பீதியை கிளப்புவோர் மீது, 'சைபர் கிரைம்' சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.ஆனால், தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் , 'வாட்ஸ் ஆப் பதிவுகள் குறித்து, சைபர் கிரைம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement