Ad Code

Responsive Advertisement

கே.வி., பள்ளிகள் இன்று திறப்பு

கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகள் மற்றும் திறக்கப்படாத மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கோடை விடுமுறைக்குப் பின், இன்று திறக்கப்படுகின்றன. கே.வி., பள்ளிகளில் இன்று முதல், தினமும் யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்படஉள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மார்ச்சில், ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து, ஏப்ரலில் புதிய கல்வியாண்டு துவங்கும். பின், பள்ளிகளின் விருப்பம் போல், 40 - 50 நாட்கள் வரை மே, ஜூனில் கோடை விடுமுறை அறிவிக்கப்படும்.

கேந்திரிய வித்யாலயா எனப்படும் மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், கோடை விடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில், 43 கே.வி., பள்ளிகள் உள்ளன.
கே.வி., பள்ளிகளில் தினமும் காலையில், பிரார்த்தனை நேரத்தில் யோகா பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement