Ad Code

Responsive Advertisement

பார்வை குறைபாடு உள்ளோருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வில் புதிய சலுகைகள்

'பார்வைக்குறைபாடு, கை, கால் முடம், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், சிவில் சர்வீஸ் முதல் நிலை மற்றும் பிரதான தேர்வெழுத, துணைக்கு ஆள்வைத்துக் கொள்ளலாம்' என, யு.பி.எஸ்.சி., கூறியுள்ளது. 

இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கை:சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர், 40 சதவீதம் வரை பார்வைக் குறைபாடு, கை, கால் முடம், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறொருவர் துணையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு, கூடுதலாக, ஒரு மணி நேரத்துக்கு 20 நிமிட வீதம் அவகாசம் அளிக்கப்படும்.

முதல் நிலை மற்றும் பிரதான தேர்வு ஆகியவற்றுக்கு, இச்சலுகை கிடைக்கும்.குறைபாடுகள் இல்லாத பிற விண்ணப்பதாரர்கள், எக்காரணத்தை கொண்டும், வேறொருவர் துணையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு யு.பி.எஸ்.சி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி., தேர்வுகள்
பி.எஸ்.சி., ஆண்டுதோறும், மூன்றுகட்டங்களாக, சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது.
முதல் நிலை, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என, இத்தேர்வுகள் இருக்கும்.
இந்திய நிர்வாகப்பணி (ஐ.ஏ.எஸ்.,), இந்திய வெளிநாட்டு சேவை (ஐ.எப்.எஸ்.,), இந்திய போலீஸ் சேவை (ஐ.பி.எஸ்.,) போன்றவற்றுக்கு, தேர்வுகள் நடைபெறும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement