Ad Code

Responsive Advertisement

ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3 மாவட்டங்களில் அமல்

பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை தவிர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன் - லைன் மூலமான பாட புத்தக விற்பனை திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கிஉள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில், பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சமச்சீர் கல்வித் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் சேவை கழகம் சார்பில், பாட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரே நேரத்தில்...

தனியார் பள்ளி ஆசிரியர்கள், பாடநுால் கழக கிடங்குகளுக்கு செல்லும் போது, சில பாட புத்தகங்கள் இருப்பு இல்லை என்ற பதில் கிடைக்கிறது. பல பள்ளிகளின் ஊழியர்கள், ஒரே நேரத்தில் வருவதால், பணம் செலுத்த நீண்டநேரம், வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.

எனவே, இந்தக் கல்வியாண்டில், பிளஸ் 1க்கு மட்டும், ஆன் - லைன் மூலம், பாட புத்தக விற்பனை திட்டத்தை, பாடநுால் கழகம் துவக்கிஉள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் சோதனை முறையில், இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

தனியார் பள்ளி நிர்வாகத்தினர், பாடநுால் கழக, 'இன்ட்ரானெட்' தளத்தில், புத்தக இருப்பு நிலையை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப, 'நெட் பேங்கிங்' வசதி மூலம் பணம் செலுத்தி, 'ஆர்டர்' செய்யலாம்.

அடுத்த ஆண்டு முதல் பணம் செலுத்திய ரசீதை, பாடநுால் கழக மாவட்ட கிடங்கில் கொடுத்து புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, பிளஸ் 1க்கு மட்டும், மூன்று மாவட்டங்களில், ஆன் - லைன் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பின், சில்லறை விற்பனையிலும் அமலுக்கு வரும்' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement