Ad Code

Responsive Advertisement

என்ஜினீயரிங் தரவரிசை பட்டியல்: 15 மாணவர்கள் 200–க்கு 200 எடுத்து முதலிடம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில், மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காக 1 லட்சத்து 51 ஆயிரத்து 910 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 135 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தொழிற் கல்வி மாணவ–மாணவிகளுக்கு 3 ஆயிரத்து 54 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பொது கலந்தாய்வு மூலம் 1 லட்சத்து 47 ஆயிரத்து, 856 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக மாணவர்கள் 92 ஆயிரத்து 920 பேரும், மாணவிகள் 57 ஆயிரத்து 990 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். 79 ஆயிரத்து 51 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள்.
என்ஜினீயரின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதற்கான பட்டியலை உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம், மாணவர் சேர்க்கை செயலாளர் உத்தரியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 15 மாணவர்கள் 200–க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1. கீர்த்திபாலன், சூலூர், கோவை, 2. நிசாந்த்ராஜன், அரூர், தர்மபுரி, 3. முகேஷ்கண்ணா, திருச்சி, 4. நிவாஸ், பரமத்திவேலூர், நாமக்கல், 5. சரவணகுமார், ஆலப்பாக்கம், சென்னை, 6. கிரிதரன், அவிநாசி, கோவை, 7.பிரவீன்குமார், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், 8. மோனீஷ், ஈரோடு, 9. மோகன்குமார், ஈரோடு, 10. விக்னேஷ்வரன், ஈரோடு, 11. கார்த்திக்ராஜா, திருச்செங்கோடு, நாமக்கல், 12. மனோஜ், காரமடை, கோவை, 13. விஷ்ணு, குமாரபாளையம், நாமக்கல், 14. தினேஷ்குமார், சத்தியமங்கலம், ஈரோடு, 15. ரோகித்போஸ், திண்டுக்கல்.
என்ஜினீயரிங் மாணவ– மாணவிகளுக்கான கலந்தாய்வு வருகிற 28–ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் விளையாட்டு பிரிவுக்கான கலந்தாய்வும், 29–ந்தேதி முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.
ஜூலை 1–ந்தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. கட்ஆப் தரவரிசை, மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவ–மாணவிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூலை 30 வரை கவுன்சிலிங் நடக்கிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement