Ad Code

Responsive Advertisement

கல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டு அரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்

தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப் பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க  நோட்டீஸ் அச்சிட்டு  விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்  நடத்தும் பள்ளிகள், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை நடத்தும் பள்ளிகள், 6 முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகு்ப்புவரை நடத்தும் பள்ளிகள் என  பல வகைப்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறக்கும் முன்னதாக  தனியார் பள்ளிகள் பலவற்றில் முன்கூட்டியே  மாணவர் சேர்க்கை நடத்தி முடித்து விடுகின்றனர். 

ஆனால், மே மாதம் தான் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உத்தரவிட்டு இருந்தும் அதை பெரும்பாலான பள்ளிகள்  கடைபிடிப்பதே இல்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் படித்து முதலிடம் பிடித்த மாணவர்களின் போட்டோக்களை  வெளியிட்டு தங்கள் பள்ளி பற்றி விளம்பரம் செய்து மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க அரசுப் பள்ளிகளில் மாணவர்  சேர்க்கை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அத னால் அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று தொடக்க  மற்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றும்  வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர் சேர்க்கை தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இப்போதே பிரச்சாரம் செய்ய  தொடங்கிவிட்டனர். அரசு வழங்கும் 14 இலவச பொருட்கள் குறித்தும் நோட்டீஸ் அச்சிட்டு வழங்கி வருகின்றனர். 

இதுதவிர சில பள்ளிகளில் சேர்த்தால் யோகா பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறை, டிடிஎச் வசதி, கட்டிட வசதி, கழிப்பறை வசதி, நூலக வசதி, ஸ்கைப்  வசதி, இன்ட்நெட் வசதி, குடிநீர் வசதி, அறிவியல் ஆய்வக வசதி, செஸ் மற்றும் கேரம்போட்டு விளையாட்டு, சிறந்த தரமான ஆசிரியர்கள்,  விளையாட்டுப் பொருட்கள் போன்ற வசதிகள் இருப்பதாகவும் நோட்டீஸ் அச்சிட்டு அந்தந்த பகுதிகளில் வழங்கி வருகின்றனர். 

இன்னும் சில தலைமை ஆசிரியர்கள் பள்ளி திறந்த பிறகு மாணவர்களை கொண்டு அந்தந்த ஊரில் பேரணி நடத்தி மாணவர்களை சேர்க்க சொல்லி  பிரச்சாரம் செய்யவும் உள்ளனர். ஆனால், தனியார் பள்ளிகளில் உள்ள பெரும்பாலான வசதிகள் அரசுப் பள்ளிகளில் இல்லை என்பதை காரணம் காட்டி  அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதை பெற்றோர் தவிர்த்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement