Ad Code

Responsive Advertisement

மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சமையல் உதவியாளர்

மதுரை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக இருக்கும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமையல் உதவியாளர் பணிக்கு பொது மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும்.  

பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்து 40 வயதுக்கு மிகாதவராகவும் எழுதப்படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பொது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 5-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

விண்ணப்பங்கள்

இந்த தகுதிகளை பெற்றிருப்பவர்கள் வருகிற 15-ந்தேதிக் குள் சம்பந்த பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி ஆணையாளர்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்றிதழ், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் இருப்பிட சான்று ஆகியவற்றின் அத்தாட்சி செய்யப்பட்ட நகல் இணைக்கப்பட வேண்டும்.

விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் அதற்கான சான்றிதழின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நேர்முக தேர்வின் போது அசல் சான்றுகள் அளிக்கப்பட வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், சம்பந்த பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், சம்பந்த பட்ட நகராட்சி ஆணையாளர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement