Ad Code

Responsive Advertisement

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா?

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை கண் காணிப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

விடைத்தாள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்வது, தேர்வு அறைக்குள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஹால்டிக்கெட்: ஹால் டிக்கெட்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பித்த போது, வழங்கிய ஒப்புகை சீட்டிலுள்ள பதிவு எண், பிறந்த தேதியை குறிப்பிட்டால் ஹால்டிக்கெட் பெறலாம். இதில், ஏதேனும் சிக்கல் இருந்தால் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தை அணுகினால் உரிய விளக்கமளிக்கப்படும் என்றும், வாய்ப்பு இருந்தால் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement