Ad Code

Responsive Advertisement

பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம்: மறு மதிப்பீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்

பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீட்டு மதிப்பெண் முடிவு தெரியும் வரை காத்திருக்காமல், தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைக் கொண்டு பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 விடைத்தாள் நகலை மாணவர்கள் பெற்று மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், தேர்வுத் துறையிலிருந்து சி.டி. மூலம் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண்ணைப் பெற்று பி.இ, எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் எம்.பி. பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 9 ஆயிரம் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஹவிண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 மே 30-ஆம் தேதிக்குள்: வரும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஆனால், பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிப்பதற்கான காலக்கெடு மே 29-ஆம் தேதி ஆகும்.
 எனவே பிளஸ் 2 மறுகூட்டல், மறு மதிப்பீட்டு மதிப்பெண் வரும் வரை மாணவர்கள் காத்திருக்கத் தேவையில்லை. திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மட்டும் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement