Ad Code

Responsive Advertisement

"டிஸ்டோனியா' - 500-க்கு 490 மதிப்பெண் பெற்று சாதித்த மாணவி!

"டிஸ்டோனியா' குறைபாடு காரணமாக நீண்ட நேரம் எழுத முடியாத நிலையிலும் சென்னை மாணவி சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் சாதித்துள்ளார்.  மாற்றுத்திறனுடைய மாணவர்களில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த மாணவி விதி மகேஷ்வரி 500-க்கு 490 மதிப்பெண் பெற்று முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவருக்கு "டிஸ்டோனியா' என்ற குறைபாடு காரணமாக இவரது விரல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இவரால் நீண்ட நேரம் எழுத முடியாது. இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டதால் கடந்த ஆண்டு இவரால் தேர்வு எழுத முடியவில்லை. இந்த ஆண்டு கூடுதல் நேரத்துடன் அவர் தேர்வு எழுதினார்.
 இது தொடர்பாக அவர் கூறியது: தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்க விரும்புகிறேன். கணிதப் பாடத்தில் விடைகளை என்னால் விவரிக்க முடியாது என்பதால் தேர்வு எழுதும் உதவியாளரை வைத்துக்கொள்ளவில்லை.
 சில தேர்வுகளை எழுத மிக அதிக நேரம் பிடித்ததால் கடினமாக இருந்தது. பிசியோதெரபி சிகிச்சை, கடுமையான வலி ஆகியவற்றுக்கு இடையேயும் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்தேன் என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement