Ad Code

Responsive Advertisement

பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நாளையுடன் முடிகிறது : இதுவரை 1.85 லட்சம் விற்பனை

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை 1.85 லட்சம்  விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பொறியியல்  மாணவர் சேர்க்கையில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம்  கடந்த 6ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 4 மையங்களிலும், தமிழகம் முழுவதும் 60 மையங்களிலும்  விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 20 கவுன்டர்களில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதில், காலை  9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் பேராசிரியர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: தமிழகம் முழுவதும், பொறியியல் மாணவர்  சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நாளையுடன் முடிவடைகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 29ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்  செய்யப்படும். 29ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.  விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் மட்டும் நேரடியாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது மதிப்பெண் உள்பட அனைத்து சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.  இது வரை 1 லட்சத்து 85  ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. ஜூன் மாதம் 15ம் தேதி ரேண்டம் எண்ணும், 19ம் தேதி ரேங் பட்டியலும் வெளியிடப்படும். ஜூன் 28ம் தேதி  விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சலிங்கும், 29ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சலிங்கும் நடைபெறும். அதைதொடர்ந்து ஜூலை 1 ம் தேதி  பொது பிரிவுக்கான கவுன்சலிங்கும் நடைபெறும். 30 நாட்கள் தொடர்ச்சியாக கவுன்சலிங் (ஜூலை 31 வரை) நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்

சென்னையில்...

சென்னையில் பொறியியல் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம்  அண்ணா பல்கலைக்கழகம்,  புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி,   குரோம்பேட்டை எம்.ஐ.இ.டி., மற்றும் பாரதி மகளிர் கல்லூரியில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement