Ad Code

Responsive Advertisement

அரசு கல்லூரிகளில் வரும் 30க்குள் மாணவர் சேர்க்கை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.

கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டு முதன்முறையாக, கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியருக்கு, ஜூன் முதல் வாரத்தில் இணைப்பு பாட போதனை வழங்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார். பள்ளி வாழ்க்கை முடித்து, முதன்முறையாக கல்லூரிக்குள் நுழையும் மாணவ, மாணவியருக்கு, கல்லூரி செயல்பாடு, கல்வி முறை, கல்லூரி சூழல் உட்பட, விவரங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை கல்லூரி வகுப்புக்கு தயார்படுத்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதற்காக தான், முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான முடிவுகளை, பல்கலை நிர்வாக குழு தான் எடுக்கும். இந்தாண்டு, பல்கலை நிர்வாக குழுவிடம், எந்தவித கலந்தாய்வும் நடத்தாமல், உயர்கல்வித் துறை செயலரே, மாணவர் சேர்க்கைக்கான தேதியை முடிவு செய்து அறிவித்து உள்ளார். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement