Ad Code

Responsive Advertisement

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க ஏற்பாடு

தேர்வு முடிவு வெளியிடப்படும் காலகட்டத்தில் மாணவர்கள் தற்கொலைகளில் ஈடுபடுவதைக் தடுக்க, சென்னை பெருநகர காவல்துறை பிளஸ் 2,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது.

சென்னையில் ஆண்டுதோறும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியான சில நாள்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. பெண் போலீஸார், தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு வகுப்புகளைத் தொடங்கியுள்ளனர். பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்களின் உதவியோடு இந்த வகுப்புகளை போலீஸார் நடத்தி வருகின்றனர்.

இந்தக் கலந்தாய்வில், மாணவர்களிடம் தேர்வு முடிவு குறித்த பயத்தை அகற்றுவது, தேர்ச்சி பெற்றாலும், தேர்ச்சி பெறாவிட்டாலும் அதை மனப்பக்குவத்துடன் கையாள்வது, குறித்து மாணவர்களிடம் கூறுவதாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement