Ad Code

Responsive Advertisement

பள்ளி திறக்கும் நாளிலே இலவச பஸ் பாஸ்

கோடைவிடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான ஜூன் 1 அன்றே அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வழக்கமாக ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச பஸ் பாஸ் விபரங்கள் தலைமையாசிரியர்களிடம் இருந்து பெறப்பட்டு கல்வித்துறை அதிகாரிகள் மூலம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்படைக்கப்படும். ஜூலை முதல்வாரத்தில்தான் புதிய பஸ் பாஸ் வழங்கப்படும். இதனால் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வரும் கல்வியாண்டில் பள்ளி துவங்கும் முதல் நாளான ஜூன் 1 அன்றே அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விருதுநகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“மாவட்டங்களில் ஏற்கனவே பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களின் பெயர் விபரங்கள், வழித்தடம், புதிய புகைப்படம் ஆகியவை தலைமையாசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அங்கு மே கடைசி வாரத்திற்குள் பஸ் பாஸ் தயார் செய்து பள்ளிகளில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 1ல் அவை மாணவர்களிடம் வழங்கப்படும். 6,9,11 மாணவர்களுக்கு வகுப்பு துவங்கிய உடன் வழங்கப்படும்,”என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement