Ad Code

Responsive Advertisement

தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால் மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
மதுரை புதூர் ஸ்டீபன் ராஜா. இவர் பி.ஏ.,(பொருளாதாரம்), பி.எட்., தமிழ்
வழியிலும்; எம்.ஏ.,(பொருளாதாரம்) ஆங்கிலத்திலும் படித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2013-14, 2014-15 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு நடந்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரி ஸ்டீபன் ராஜா விண்ணப்பித்தார். டி.ஆர்.பி., தலைவர் அதை நிராகரித்தார். ரத்து செய்யக்கோரிஉயர்நீதிமன்றத்தில் ஸ்டீபன் ராஜா மனு செய்தார். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். ஸ்டீபன் ராஜா மேல்முறையீட்டில், 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு உண்டு. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம்உத்தரவு:


அரசாணைப்படி தமிழ்வழியில் படித்தவர்கள் யார் என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. நேரடித் தேர்வு நடத்தும்போது அப்பணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியை தமிழில் படித்திருக்க வேண்டும். 'முதுகலை பட்டப்படிப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு, முதுகலை படிப்பை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்'என அரசு தெளிவுபடுத்தி உள்ளது. மனுதாரர் முதுகலை படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை. தனி நீதி உத்தரவை உறுதி செய்கிறோம். மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு உத்தரவிட்டனர். அரசு சிறப்பு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜரானார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement