Ad Code

Responsive Advertisement

மாரடைப்பு வந்தவர்களுக்குப் பொன்னான நேரம்!!!

            டாக்டர் கு. கணேசன் எழுதிய ‘மாரடைப்புச் சந்தேகங்களும் டாக்டரின் ஆலோசனைகளும்’ நூலில் இருந்து பயனுள்ள சில பகுதிகள்:


ஒருவருக்கு மாரடைப்பு வந்த பின்னர், முதல் 60 நிமிடங்கள் அவருக்குப் `பொன்னான நேரம்’. இந்த நேரத்துக்குள் நவீன சிகிச்சைகள் தரக்கூடிய, அதாவது, கேத்லேப் வசதியுள்ள மருத்துவமனைக்குச் சென்று பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையைச் செய்துகொண்டால், 100 சதவீதம் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கி, இதயத் தசைகள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இதன்மூலம் மீண்டும் எப்போதும்போல், உடல்நலத்துடன் அதிக நாள்கள் அவர் வாழ முடியும். மாரடைப்பு வந்தவர்களுக்கு இந்த ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை பெற முடியாவிட்டால், குறைந்தது 12 மணி நேரத்திற்குள்ளாக இந்தச் சிகிச்சையைச் செய்துகொண்டால், இதயத்துக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும். 12 மணி நேரம் கடந்துவிட்டால், இதயத் தசைகளில் தழும்பு ஏற்பட்டுவிடும். பிறகு, அந்த இடம் வேலை செய்யாது. இதனால், சிகிச்சைக்குப் பின்னர்கூட மூச்சுத்திணறல், சோர்வு போன்ற தொல்லைகள் உருவாகலாம். இதன் விளைவாக வாழ்நாள் குறையும்.

மாரடைப்பு வந்தவர்கள் சாப்பிட வேண்டியவை:

அரிசி, கோதுமை, மைதா, கம்பு, கேழ்வரகு, முழு தானிய வகைகள்.

துவரை, பட்டாணி, கொண்டைக் கடலை, கடலைப்பருப்பு வகைகள்.

வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர்.

கீரைகள், காய்கறிகள், பழங்கள் (இதய நோயுடன் நீரிழிவு நோயும் இருந்தால், பழங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.)

நார்ச்சத்து மிகுந்த தக்காளி, அவரை, வெண்டைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, பூசணிக்காய் ஆகிய காய்கறிகள்.

எண்ணெயில் வறுத்த காய்களைவிட ஆவியில் அவித்த அல்லது வேகவைத்த காய்கள் நல்லது.

மாரடைப்பு வந்தவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டியவை:

கொழுப்பு நீக்கப்பட்ட ஆட்டிறைச்சியை மூன்று வாரங்களுக்கு ஒருமுறை (கல்லீரல், மூளை, சிறுநீரகம் தவிர்த்து) சாப்பிடலாம்.

கோழி இறைச்சியை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.

வாரத்துக்கு மூன்று முறை, இரண்டு மீன் துண்டுகள் சாப்பிடலாம்.

தினமும் 5 மி.லி.க்கு மேல் நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

மாரடைப்பு வந்தவர்கள் தவிர்க்க வேண்டியவை:

முட்டையின் மஞ்சள் கரு, மாட்டுக் கறி, பன்றிக் கறி.

ஆடை நீக்கப்படாத பால், தயிர், வெண்ணெய், பாலாடை, பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள்.

தேங்காய், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா.

எண்ணெயில் பொரிக்கப்படும் அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி.

உருளைக்கிழங்கு சிப்ஸ், சமோசா, கருவாடு, வடகம்.

பீட்ஸா, பர்கர், குளிர்பானங்கள், கிரீம் கேக்குகள், ஐஸ்கிரீம், கோலா, ஜாம், பாதாம் கீர், மது பானங்கள்.

மாரடைப்பு வந்தவர்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான குறிப்புகள்:

பொரித்த உணவு வகைகள் ஆகாது.l

உப்பைக் குறைக்க வேண்டும்.

நொறுக்குத்தீனிகள் ஆகாது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை, இனிப்பு போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

அதிகம் சாப்பிடக் கூடாது.

அடிக்கடி சாப்பிடவும் கூடாது.

மாரடைப்புச் சந்தேகங்களும் டாக்டரின் ஆலோசனைகளும்,

டாக்டர் கு. கணேசன், மருத்துவப் பதிப்பகம், எண்: 26/12, மேற்கு அரசமரத் தெரு, அமைந்தகரை, சென்னை- 29. தொலைபேசி: 044-2664 0533.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement