Ad Code

Responsive Advertisement

வேலைநிறுத்தம் வாபஸ் ஏன்? சத்துணவு ஊழியர்கள் விளக்கம்

கடந்த ஒரு வாரமாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றது ஏன் என சத்துணவு ஊழியர் சங்கத்தினர் விளக்கம் அளித்தனர். தலைமைச் செயலகத்தில் சமூகநலன்- சத்துணவு திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதியைச் சந்தித்த பிறகு அவர்கள் இந்த விளக்கத்தைத் தெரிவித்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் காலவரையற்ற போராட்டத்தை கடந்த 15-ஆம் தேதி முதல் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டத்தால் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் பணி பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், காலவரையற்ற போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக திங்கள்கிழமை மாலை, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் சமூகநலன் -சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:

தமிழக அரசிடம் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளில், 12 கோரிக்கைகள் ஏற்கெனவே ஏற்கப்பட்டுள்ளன. இதற்கான அரசு உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகளை வைத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகளை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு சத்துணவு பரிமாறுவது என்பது மிகவும் முக்கியமான பணி. எனவே, எங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement