Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் : 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது.
இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள்.

எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது.

இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.

இந்தப் பணியிடங்களை சிறப்புத் தேர்வின் மூலம் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் இந்த சிறப்புத் தேர்வை மாநில அளவில் நடத்தும். இந்தத் தேர்வில் தகுதி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தி பணி நியமனம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் மாவட்ட அளவில் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வக உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement