Ad Code

Responsive Advertisement

மே முதல் வாரத்தில் வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ளதையடுத்து மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதற்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதற்கட்டமாக மொழிப்பாடங்கள், ஆங்கில பாடத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. கடந்த 2 வாரங்களில் இந்த விடைத்தாள்கள் முழுவதும் திருத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணி முடிவடைந் துள்ளது. விடைத்தாள்களின் மதிப்பெண்கள் சிடி மூலம் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்படும். அதன் பிறகு பாட வாரியாக ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

மதிப்பெண் பட்டியலை தயாரிக்க தேர்வுத் துறைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்றும் மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement