Ad Code

Responsive Advertisement

பன்றி காய்ச்சல் பற்றி தெரிந்துக்கொள்வோம்!

* பன்றி காய்ச்சல் ஆங்கிலத்தில் ஸ்வைன் ஃப்ளு என்று அழைக்கப்படுகிறது.

* இந்நோய் மெக்சிகோ நாட்டில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. 

* இன்புளுயன்சா ஏஎச்1என்1 எனும் வைரஸ் கிருமி பன்றிகளுக்கு தொற்றி, மனிதர்களுக்கும் தொற்றி இந்நோயை உண்டாக்குகிறது. 

* நோய் அறிகுறிகள்: காய்ச்சல், மூக்கிலிருந்து நீர் வடிதல், தசைவலி, இருமல், தொண்டை வலி, மூச்சுவிடுதலில் சிரமம், பசியின்மை, வாந்தி, தண்ணீர் குடிக்க முடியாத நிலை, வயிற்றுப்போக்கு போன்றனவை ஆகும். 

* பன்றி காய்ச்சலை தவிர்க்க நாம் செய்ய வேண்டியது, வெளியிடங்களுக்கு சென்று வந்தால் கையை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். காணரம் என்னவென்றால், இந்த வைரஸ் கிருமி பேருந்து கைப்பிடி, மற்றும் இருக்கை பகுதிகள், மேசையின் மேற்பகுதி போன்றவற்றில் 2 மணி நேரத்திற்கு மேல் உயிருடன் இருக்கும். எனவே தான் வீட்டிற்கு வந்ததும் கைகளையும், விரல் இடுக்குகளையும் நன்கு சோப்பு போட்டு மிகவும் தேய்த்து கழுவுவது மிகவும் அவசியம். 

* இந்நோயால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்துவதோடு நாம் அவர்களிடம் பேசும் போது மூக்கு, வாய்ப்பகுதிகளை கைக்குட்டை போன்ற சிறு துணியால் மூடிக்கொண்டு பேச வேண்டும். நோய் பாதித்தவரை தொட்டு பேசுதல், கைக்குலுக்குதல் போன்றவற்றை தவிர்ப்பதோடு, எச்சில், சளி ஆகியவை பொது இடங்களில் உமிழ்வதை தவிர்த்துவிட வேண்டும். மருத்துவர் ஆலோசனை இன்றி நாமாக எந்த மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டும். இக்காய்ச்சலை குணப்படுத்துவது மிக எளிது. இதற்கான தடுப்பு மாத்திரையின் பெயர் டாமிபுளு என்பதாகும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement