Ad Code

Responsive Advertisement

3 வயது நிரம்பாத சிறுமி வில்வித்தையில் லிம்கா சாதனை

பிறவி மேதை' என்ற சொற்றொடருக்கு ஏற்ப, டில்லியை சேர்ந்த 3 வயது சிறுமி, வில்வித்தையில் சாதனை படைத்து, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

டில்லியில், வில்வித்தை பயிற்சி நிலையம் நடத்துபவர் செருகுரி சத்தியநாராயணன். இவரது இளைய மகள் 2004ம் ஆண்டும், வில்வித்தை பயிற்சியாளரான, மூத்த மகன், 2010ம் ஆண்டு நடந்த, சாலை விபத்திலும் இறந்துவிட்டனர்.
இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில், சத்தியநாராயணனும், அவரது மனைவியும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர். வாடகைத் தாய் மூலம் பிறந்த பெண் குழந்தைக்கு டாலி ஷிவானி செருகுரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

மகளின் வில்வித்தை ஆர்வம் குறித்து சத்தியநாராயணன் கூறியதாவது: கருவிலேயே இந்தத் திறமை அவளுக்கு வந்துவிட்டது. குழந்தையாக இருந்தபோதே, வில் மற்றும் அம்புடன் டாலி விளையாடினாள். அவளது ஆர்வத்தைக் கண்டு, கார்பனால் வில்-அம்பை தயாரித்து முறைப்படி பயிற்சி அளித்தேன். டாலி, அதை எளிதில் புரிந்துகொண்டு பயன்படுத்தக் கற்றுக்கொண்டாள். ஐந்து முதல் ஏழு மீட்டர் தூரம் அம்பு செலுத்தும் பிரிவில், 24 முறை முயற்சி செய்தாள். 72 அம்புகளை எய்து, முழுமையான 200 பாயிண்டுகளை பெற்று சாதனை படைத்தாள். இந்தியாவின் லிம்கா சாதனை புத்தகத்தில் இளம் சாதனையாளராக இடம் பெற்றுள்ளதாக, பிஸ்வரூப் ராய் சவுத்ரி அறிவித்துள்ளார். மூன்று வயது நிரம்புவதற்கு இன்னும் ஒன்பது நாட்கள் உள்ள நிலையில், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement