Ad Code

Responsive Advertisement

இயற்பியல் எளிதானதால் மகிழ்ச்சியே: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது' என மாணவர், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கே.மணிவேல், அரசு மேல்நிலைப்பள்ளி அழகமாநகரி: 3, 5 ,10 மதிப்பெண் வினாக்கள் கடினமில்லை என்றாலும், 5 மதிப்பெண் கட்டாய வினா சற்று கடினம். இதில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. 60 சதவீதம் புத்தகத்தின் பின்புறம் இருந்தும், 40 சதவீதம் புத்தகத்திற்கு உள்ளே இருந்தும் கேட்கப்பட்டன. வகுப்பறையில் ஆசிரியர்கள், 'முக்கியம்' என கூறிய சில வினாக்கள் வந்தன.


வி.சுவாதி, 21ம் நூற்றாண்டு மெட்ரிக் பள்ளி, சிவகங்கை: 10 மதிப்பெண் வினாக்களில் நான்கில் ஒன்று கடினமாக இருந்தது. 5 மதிப்பெண் வினாக்கள் கடினமில்லை. 3 மதிப்பெண் வினாக்களில், இரண்டு சற்று கடினம். வகுப்பறை, சிறப்பு வகுப்பில் ஆசிரியர்கள் கோடிட்டு காட்டிய வினாக்கள் நிறையவே இடம் பெற்றிருந்தன. இரண்டையும் படித்தவர்களுக்கு சிரமம் இருந்திருக்காது.


டி.அகிலா, மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, காரைக்குடி: ஒரு மதிப்பெண் வினாக்கள் கஷ்டம். யோசித்து எழுதியதால் அதிக நேரம் செலவானது. 5, 10 மதிப்பெண் வினாக்கள், கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்டவை தான்.


வி.சுந்தரராமன், ஆசிரியர், எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலை பள்ளி, காரைக்குடி: அனைத்து கேள்விகளும் எதிர்பார்க்கப்பட்டவையே. ஐந்து மதிப்பெண் வினாக்களில், 10க்கும் மேற்பட்டவை கடந்த ஆண்டுகளை காட்டிலும் எளிதானவை. குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட தேர்ச்சி பெறுவர். இரண்டாவது, மூன்றாவது பாடத்தில் மாணவர்கள் பல முறை எழுதிப் பார்த்த கணக்குகளே கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண் வினாவில், மூன்று கேள்விகள் மாணவர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியது. இவை இதுவரை கேட்கப்படாத கேள்விகள். ஒருமதிப்பெண் வினாக்களில் 19 கேள்விகள், புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து கேட்கப்பட்டவை. எந்த ஆண்டிலும் இவ்வளவு கேள்விகள் புத்தக பின் பகுதியில் இருந்து கேட்கப்படவில்லை. புத்தகத்தின் பின்பகுதியில் இருந்த ஒரு மதிப்பெண்களை படித்திருந்தால் வெற்றி மிக எளிது. வேதியியலில் கஷ்டப்பட்ட மாணவர்கள், இயற்பியலில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement