Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் . தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்கப்படுமா?

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தவறான, எழுத்து பிழையான கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 'பி டைப்' வினாத்தாளில் ஒரு மதிப்பெண்ணில் 2 வது கேள்வியில் 'லெட்டின்' அணு எடை தவறாக உள்ளது. 19 வது கேள்வியில் ஓர் அமைப்பு, சுற்றுப்புறத்தின் 'என்ட்ரோபி' மாற்றம் மதிப்பு கொடுக்கப்பட்டு, அண்டத்தின் 'என்ட்ரோபி' மாற்றம் கேட்கப்பட்டது. அதற்கான விடை தவறாக உள்ளது.

மூன்று மதிப்பெண்ணில் 43 வது கேள்வியில் வினைவேக மாற்றி கேட்கப்பட்டது. ஆனால் ஆங்கிலவழி வினாத்தாளில் வினைவேக மாற்றம் என கேட்கப்பட்டது. பத்து மதிப்பெண்ணில் 63 வது கேள்வியில் 'அ' பிரிவில் தசை இறுக்க வலி நிவாரணிகளின் பயன் கேட்கப்பட்டது. ஆனால் புத்தகத்தில் 'ஆண்டிஸ்பாஸ் மோடிக்ஸ்' பயன் என கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கேள்விகளால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

வேதியியல் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
ஒரு மதிப்பெண்ணில் கேட்கப்பட்ட 6 வது கேள்வி, 3 மதிப்பெண்ணில் கேட்கப்பட்ட 45 வது கேள்வி புத்தக பயிற்சி பக்கத்தில் இருந்தாலும் விடை இல்லை. புத்தகத்தில் விடை இல்லாத கேள்வி கேட்க கூடாது என்ற விதி உள்ளது. மூன்று மதிப்பெண்ணில் 44 வது கேள்வியில் ஆஸ்வால்டின் நீர்த்தல் விதி கேட்கப்பட்டது. அதே கேள்வி 10 மதிப்பெண்ணில் 67 வதுo கேள்வி 'அ' பிரிவிலும் கேட்கப்பட்டது. இதற்கு பதில் தெரியாவிட்டால் இரண்டிலும் மதிப்பெண் இழக்க வாய்ப்புள்ளது. கேள்வியில் அதிகளவில் எழுத்து பிழைகளும் உள்ளன. தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement