Ad Code

Responsive Advertisement

மார்ச் 23 - 24 வயதில் தூக்குமேடை ஏற பயப்படாத மாவீரன் தோழர் பகத்சிங், தோழர் சுகதேவ், தோழர் ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள்...


இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீரஞ்செறிந்த பக்கங்களில் பகத் சிங்கின் பெயர் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியாவர், இந்தியாவில் மார்க்சியத்தைப் பேசிய முதல்வருகளில் ஒருவர். இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில்ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர்சாஹீதுபகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதிஎனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.
.
பகத்சிங்கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார்.அகிம்சையை பின்பற்றும் காந்தி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்பீடு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
24 வயதில் தூக்குமேடை ஏற பயப்படாத பகத்சிங், நாட்டின் எதிர்காலம் குறித்து பயந்து தூக்கிலேற்றப்படுவதற்கு முந்தைய நாள் தன் சகோதரனுக்கு எழுதிய கடிதத்தில்....
*புரட்சி என்ற மகத்தான கடமைக்காக நாங்கள் செய்யும் உயிர்த் தியாகம் பெரிதல்ல.!
*நாங்கள் இறந்து விடுவோம் எங்கள் கருத்துக்களும்,ஆவேசமும் உங்களைத் தட்டி எழுப்பும்.!
*நாளை காலை மெழுகுவர்த்தி ஒளி மங்குவது போல் நானும் மறைந்து விடுவேன். ஆனால், நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்..!
*தனி நபர்களைக் கொல்வது எளிது, ஆனால் உங்களால் கருத்துகளைக் கொல்ல முடியாது..!
புரட்சி நீடூழி வாழ்க..!
‪#‎மாவீரன்_தோழர்_பகத்சிங்‬
.
வீர வணக்கம்..!
வீர வணக்கம்...!
வீர வணக்கம்....!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement