Ad Code

Responsive Advertisement

இலவச இணைப்புதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டர்: ஏப்.1-முதல் நடைமுறை

தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம்,இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு 28 லட்சம் இலவச வாடிக்கையாளர் உட்பட மொத்தம் 1.53 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு திட்டம் கடந்த தி.மு.க., ஆட்சியில் 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. இவர்களுக்கு மானிய விலையில், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்பட்டது.ஆனால் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கூடுதல் சிலிண்டர் போன்ற சலுகைகளை பெற முடியாது.

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் காஸ் சிலிண்டர் மானியம், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இணைய இலவச இணைப்பு பெற்றவர்கள், காஸ் ஏஜன்சிகளை அணுகினர். சரியாத பதில் கூறாததால், அவர்கள் இணைப்பை சரண்டர் செய்ய முன் வந்தனர்.

அதற்கும், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில், விண்ணப்பிக்க வேண்டும் என பல்வேறு நடைமுறை இருந்ததால், அவர்கள் மாற்ற முடியாமல் தவித்தனர்.இதையடுத்து இலவச காஸ் இணைப்பு வாடிக்கையாளருக்கு, மற்ற வாடிக்கையாளர்கள் போல் ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்க, தமிழக உணவு வழங்கல் துறை, எண்ணெய் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.எண்ணெய் நிறுவனங்கள், ஏஜன்சிகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், இலவச இணைப்பு தாரர்களுக்கும் 12 சிலிண்டர்  வழங்கலாம். இரண்டாவது சிலிண்டர் பெற விரும்புவோர் அதற்கான டிபாசிட் தொகை செலுத்தி பெற்று கொள்ளலாம். பெயர் மாற்றம் போன்ற நடைமுறைகள், மற்றவர்களுக்கு போல காஸ் ஏஜன்சிகளே மேற்கொள்ளலாம். ஆனால், குடும்ப உறுப்பினர் தவிர்த்து மூன்றாம் நபருக்கு மாறுதல் செய்யக்கூடாது, என அறிவுறுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement