Ad Code

Responsive Advertisement

பயணிகள் கட்டணம் உயரவில்லை; ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தற்போது தாக்கல் செய்து, புதிய ரயில், பயணிகளுக்கான புதிய வசதிகள், திட்டங்கள் குறித்த அறிவிப்புகள்

பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

* நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.


* ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்

* ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன .

* ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.

* ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள் அதிகம் தேவை.

* சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை.

கட்டண உயர்வில்லை

* பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை.

* அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள்.

* கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்.

* 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம்.

பசுமை கழிவறைகள்

* ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம்.

* 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.

* 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு

குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

* 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள்.

* நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138

* மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா.

செல்போன் சார்ஜ் செய்யும் வசதி.

முக்கிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி.

ரயில்வே உணவுகள் தரம் உயர்த்த சிறந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம்.

மகளிர் பெட்டிகளில் பொறுத்தப்படும்.

எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரயில்வேக்கு ஒதுக்கலாம்.

பொதுபெட்டிகளிலும் மொபைல் சார்ஜர்கள் பொருத்தப்படும்.

டிக்கெட்டுகளை 4 மாதத்துக்கு முன்னரே ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.

1200 கிமீ தூரத்திற்கு புதிய ரயில்பாதைகள்.
பயணிகள் வசதியை மேம்படுத்துவதற்கான நிதி 67% அதிகரிப்பு.முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் அன்-ரிசர்வ்ட் பயணிகள் 5 நிமிடத்தில் டிக்கெட் வாங்க புதிய வசதி .இதற்காக 'Operation 5 Minutes' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

எரிபொருள் செலவை குறைக்க குறைந்த எடையிலான பெட்டிகள் தயாரிக்க முடிவு.

400 ரயில் நிலையங்களில் wi-fi வசதி.

சரக்கு ரயில் போக்குவரத்திற்கு 2 தனிப்பாதைகள்

ரயில் நிலையங்களை நவீனப்படுத்த தனியாருக்கு அனுமதி.

காகிதமில்லா பயணச்சீட்டு கொண்டுவர முயற்சி
சரக்கு ரயில் வேகம் அதிகரிக்க முடிவு.

9 வழி தடங்களில் ரயில்களின் வேகம் 160 கி.மீட்டராக அதிகரிக்க முடிவு.மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்.

[800 கி.மீ மீட்டர் கேஜ் பாதைகள் அகல பாதைகளாக மாற்றப்படும்.

மேகலாயாவுக்கு முதன்முறையாக ரயில் சேவை.

ரூ 96 ஆயிரம் கோடியில் 77 விரிவாக்க திட்டங்கள்.

முக்கிய ரயில்களின் படுக்கை வசதி எண்ணிக்கை உயர்த்தப்படும்.
முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களாக நீட்டிப்பு.
வயதான பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கீழ் படுக்கை வசதி கிடைக்க வகை செய்யப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement