Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முறைகேடுகளை தடுப்பது எப்படி? அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது. அப்போது, தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த மாதம் 19ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு 24,653 மாணவர்கள், 28,747 மாணவிகள் என மொத்தம் 53,400 பேர் எழுத உள்ளனர். 10ம் வகுப்பு பொது தேர்வை 27,835 மாணவர்கள், 29,524 மாணவிகள் என மொத்தம் 57,359 பேர் எழுதுகின்றனர்.

இப்போது தேர்வுகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நேற்று நடந்தது. இதில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்தல், பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் உரிய போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதேபோல, தேர்வு நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குதல், முறைகேடுகளை தடுக்க முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆய்வு அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை உறுப்பினர்கள் நியமித்தல் மற்றும் தேர்வு மையங்களில் நிலையான படை உறுப்பினர்கள் நியமித்து தேர்வுகள் சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement