Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு செவ்வாய்க்கிழமை (பிப்.24) துவங்குகிறது. நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 இல் தொடங்கி ஏப் 10ஆம் தேதி வரை நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 459 பள்ளிகள் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பு தேர்வை 46 ஆயிரத்து, 153 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

இதில் முதல்கட்டமாக 15 மதிப்பெண்ணுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு அந்தந்த பள்ளியிலேயே நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில்: பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வு பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க அந்தந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் 122 தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள், மின் வசதி உள்ளிட்டவைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் 12 மையங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 தேர்வை 276 பள்ளிகளைச் சேர்ந்த 17 ஆயிரத்து 935 மாணவர்களும், 19 ஆயிரத்து 374 மாணவிகளும் எழுதுகின்றனர். இதில் பதற்றமான கிராமம் மற்றும் நகரில் உள்ள பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளோம் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement